search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள்"

    3 நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை அவர்களுக்கு சம்பளம் கிடையாது என்று புதுவை சட்டசபை செயலகம் தெரிவித்துள்ளது. #NominatedMLAs #PondicherryAssembly
    புதுச்சேரி:

    புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பரிந்துரையின்றி பா.ஜனதா மாநில தலைவர் சாமி நாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது.

    மத்திய அரசு நேரடியாக நியமித்த எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் வைத்திலிங்கம் அங்கீகரிக்க மறுத்து விட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நியமனம் செல்லும் என அதிரடியாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.

    அதோடு விசாரணையின்போது நியமன எம்.எல்.ஏ.க்களை சட்ட மன்றத்துக்குள் செயல்பட அனுமதிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்தை ஏற்ற சபாநாயகர் வைத்திலிங்கம் 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் கடந்த 2-ந் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்தார். உச்சநீதிமன்றத்தின் எதிர் பார்ப்புக்கு இணங்க நடப்பு கூட்டத்தொடரில் மட்டும் நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிப்பதாகவும், செப்டம்பர் 11-ந்தேதி வழக்கின் தீர்ப்புக்கு ஏற்ப இறுதி முடிவு எடுக்கப்படும் என சட்டமன்றத்தில் சபாநாயகர் அதிரடியாக தெரிவித்தார்.

    மேலும் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லை என்றும் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

     நியமன எம்.எல்.ஏ. சாமிநாதனுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் செப்டம்பர் 11-ந் தேதி வரை மட்டுமே தகுதி உள்ளதாக குறிப்பிட்டுள்ள காட்சி.

    அதே நேரத்தில், பா.ஜனதாவின் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அடையாள அட்டை, கார் பாஸ் போன்றவை அளிக்கப்பட்டு உள்ளது. இவை வருகிற 11-ந் தேதி வரை தகுதியுடையதாக அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் சம்பளம் வழங்க சட்டசபை செயலகம் பட்டியல் அனுப்பி உள்ளது.

    இதில் பா.ஜனதாவின் நியமன எம்.எல்.ஏ.க்கள் பெயர் இடம்பெறவில்லை. எனவே, ஆகஸ்டு மாத சம்பளம் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கிடைக்காது என உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து சட்டசபை செயலகத்தில் கேட்டபோது, நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு மீண்டும் வருகிற 11 -ந் தேதி விசாரணைக்கு வருகிறது. இறுதி தீர்ப்பு வந்தபிறகே சம்பளம், சலுகைகள் குறித்து முடிவு எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக பா.ஜனதா தலைவர் சாமி நாதனிடம் கேட்டபோது, தற்போதைய நிலையில் சம்பளம் முக்கியமில்லை. ஏற்கனவே வருகை பதிவேடு மற்றும் சட்டசபை ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளோம்.

    ஏற்கனவே கூறியபடி எம்.எல்.ஏ.க்களாக சட்டசபைக்குள் 3 பேரும் நுழைந்து விட்டோம். உச்ச நீதிமன்றமும் எங்களுக்கு நல்லதொரு தீர்ப்பை நிச்சயமாக வழங்கும் என கூறினார்.   #NominatedMLAs #PondicherryAssembly
    பா.ஜனதாவை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் புதுவை காங்கிரசார் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந்தேதி நாராயணசாமி தலைமையிலான அரசு பதவி ஏற்றது.

    புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்துக் கொள்ள அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் பதவி ஏற்று ஒரு ஆண்டாகியும் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்படவில்லை. அதற்கான எந்த முயற்சிகளும் நடக்கவில்லை.

    இந்த நிலையில் பாரதீய ஜனதாவை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசே நேரடியாக நியமித்தது. கவர்னர் கிரண்பேடியின் சிபாரிசின் பேரில் தான் 3 பேரும் நியமிக்கப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் கவர்னர் கிரண்பேடி நான் அவர்களை சிபாரிசு செய்யவில்லை. மத்திய அரசே நேரடியாக நியமித்திருக்கிறது என்று கூறினார்.

    புதுவையில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருக்கும்போது, பாரதீய ஜனதா கட்சியினரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்ததால் புதுவை காங்கிரசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    முதலிலேயே புதுவை அரசு நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என்று கட்சியிலேயே பலர் விமர்சித்தனர்.

    அதன்பிறகு எம்.எல்.ஏ.க் கள் நியமனம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதிலாவது தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று காங்கிரசார் எதிர்பார்த்தனர். ஆனால் நியமனம் செல்லும் என்று ஐகோர்ட்டு கூறிவிட்டது.

    இது காங்கிரசாருக்கு அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டுக்கு வழக்கு சென்றது.

    இதற்கிடையே சபாநாயகர் நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க தொடர்ந்து மறுத்து வந்தார். இதனால் காங்கிரசார் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கில் 3 எம்.எல்.ஏ.க்களையும் சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    ஏற்கனவே ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியபோதுகூட எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் உள்ளே அனுமதிக்கவில்லை. அதேபோல சுப்ரீம் கோர்ட்டு கருத்தையும் மீறி 3 பேரையும் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள் என்றே காங்ரசார் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று சட்டசபை கூட்டத்துக்குள் நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதித்து விட்டனர். இது புதுவை காங்கிரசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் பாரதீய ஜனதா வென்றுவிட்டதாக அவர்கள் கருதுகிறார்கள்.

    இது காங்கிரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு என்றும் நினைக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் கண்டுகொள்ளவே இல்லை. குறைந்தபட்சம் பாராளுமன்றத்தில் கூட இதுபற்றி யாருமே பேச வில்லை.

    டெல்லியில் போராட்டம் எதையும் நடத்தவும் இல்லை. இதுவும் காங்கிரசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

    புதுவையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வாரிய தலைவர்களை நியமிப்பது வழக்கம். அதில் கட்சி நிர்வாகிகளுக்கும் வாரிய தலைவர் பதவி வழங்கப்படும். தற்போது ஆட்சிக்கு வந்து 2 ஆண்டு கடந்துவிட்ட நிலையிலும் கட்சி நிர்வாகிகள் யாருக்கும் வாரிய தலைவர் பதவி வழங்கவில்லை. அதற்கான முயற்சிகளும் நடப்பதாக தெரியவில்லை. இதுவும் காங்கிரஸ் நிர்வாகிகளை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.

    நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை பா.ஜ.க.வினர் சட்டசபை, முதல்-அமைச்சர், சபாநாயகர் வீடுகள் ஆகியவற்றில் முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். வருகிற 19-ந் தேதி இது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் முன்கூட்டியே சட்டசபை கூட்டத்தை முடித்து வைக்க உள்ளனர். 19-ந்தேதி அன்று சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட இருக்கிறது.

    எம்.எல்.ஏ.க்களை அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை பா.ஜ.க.வினர் சட்டசபை, முதல்-அமைச்சர், சபாநாயகர் வீடுகள் ஆகியவற்றில் முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.

    இந்த போராட்டம் குறித்து பா.ஜ.க. சார்பில அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. போராட்ட திட்டத்தை ரகசியமாக வைத்துள்ளனர்.

    எந்த நேரத்தில் போராட்டம் நடக்கும் என்ற விவரங்களையும் பா.ஜ.க.வினர் கூறவில்லை.
    எந்த தடை போட்டாலும் அதை மீறி புதுவை சட்டசபைக்குள் நாளை நுழைவோம் என்று நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். #nominatedbjpmlas

    புதுச்சேரி:

    புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் தவிர, 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிப்பது வழக்கம்.

    மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு அவர்களை நியமிக்கும். ஆனால், இந்த தடவை மாநில அரசின் பரிந்துரை இல்லாமலேயே கடந்த ஆண்டு ஜுலை மாதம் மாநில பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது.

    அவர்கள் 3 பேரையும் சபாநாயகர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்க மறுத்து சட்டசபைக்குள் நுழைய அனுமதிக்க வில்லை. இதை மீறி கடந்த மார்ச் மாதம் சட்டசபை கவர்னர் உரை கூட்டத்தின் போது, 3 பேரும் சட்டசபைக்குள் நுழைய முயன்றனர். சபாநாயகர் உத்தரவின் பேரில் சபை காவலர்கள் அவர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்தினார்கள்.  நேற்று 3 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயரிடம் தங்களை திங்கட்கிழமை (நாளை) நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தனர். இந்த கடிதத்தை சபாநாயகரின் முடிவுக்காக சட்டசபை செயலாளர் அனுப்பி வைத்துள்ளார். அதன் மீது சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று தெரியவில்லை. 

    ஆனால், எந்த தடை போட்டாலும் அதை மீறி நாளை சட்டசபைக்குள் நுழைவோம் என்று நியமன எம்.எல்.ஏ.க்கள் அறிவித்துள்ளனர். இது சம்பந்தமாக பாரதீய ஜனதா தலைவரும், நியமன எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஐகோர்ட்டு எங்கள் நியமனத்தை செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது. இதன் மீதான அப்பீல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாங்கள் சட்டசபைக்குள் செல்ல எந்த தடையும் விதிக்கவில்லை.

    எனவே, நாளை நாங்கள் சட்டசபைக்கு செல்ல இருக்கிறோம். ஐகோர்ட்டு தீர்ப்பு அமலில் இருப்பதால் சபாநாயகர் எங்களை அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். அதையும் மீறி தடை விதிக்கப்பட்டாலும் நாங்கள் திட்டமிட்டபடி சட்டசபைக்கு செல்வோம். ஏற்கனவே சட்டசபைக்குள் செல்ல அனுமதிக்காததால் நாங்கள்  சபாநாயகர் மீது ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளோம்.

    நாளை எங்களை நுழைய விடாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடருவோம். அதற்கு சபாநாயகர் பதில் சொல்ல வேண்டியது வரும். 

    எங்களை மத்திய அரசு  நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து இருக்கிறது. இதை சபாநாயகர் மீறுவது மத்திய அரசை மீறும் செயலாகும். எனவே, மத்திய அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்கும். மேலும் புதுவை நிர்வாகியான கவர்னர் உத்தரவையும் சபாநாயகர் மீறி வருகிறார். இதனாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். சபாநாயகரை பொருத்த வரை இந்த அரசு இருக்க கூடாது என நினைக்கிறார்.  சட்டத்தையும், கோர்ட்டு உத்தரவையும் அவர் மீறுகிறார். இதற்கான பலனை அவர் சந்திக்க வேண்டியது வரும். 

    இவ்வாறு அவர் கூறினார். #nominatedbjpmlas

    ×